செங்கோட்டை அரசு பள்ளியில் இடிந்து விழுந்த கட்டிடத்தை சீரமைக்க கிருஷ்ணமுரளி எம்எல்ஏ நடவடிக்கை

செங்கோட்டை : செங்கோட்டையில் பழமைவாய்ந்த அரசு பள்ளியில் பராமரிப்பின்றி இடிந்து விழுந்த கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு நடத்திய  கிருஷ்ணமுரளி எம்எல்ஏ, சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டார். செங்கோட்டை பஸ் நிலையம் அருகே சுமார் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த  எஸ்எம்எஸ்எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு முறையான பராமரிப்பின்றி சேதமடைந்த நிலையில் இருந்து வந்த புலிக்குண்டு கட்டிடம், தொடர்ந்து பெய்த கனமழையால் இடிந்து விழுந்தது. இதையடுத்து இப்பள்ளியில் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.  அத்துடன் தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் அவர் கூறுகையில் ‘‘ பழமைவாய்ந்த இப்பள்ளியின் முன்னாள் மாணவரான நான், போதிய பராமரிப்பின்றியும், தொடர் மழையாலும் இடிந்து விழுந்த கட்டிடத்தை பார்வையிட்டேன். இக்கட்டிடத்தை பழமை மாறாமல் சீரமைக்க தேவையான நடவடிக்கை எடுப்பேன். மேலும் பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த பாடுபடுவேன்’’ என்றார்.

 ஆய்வின் போது பள்ளித் தலைமை ஆசிரியர் பீட்டர் ஜெகதீஸ்போஸ், என்எஸ்எஸ் ஆசிரியர் முருகன், முதுநிலை ஆசிரியர் அருண், மற்றும் பணியாளர்கள், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் கணேசன், முன்னாள் கவுன்சிலர் திலகர், மாவட்டப் பிரதிநிதி மைதீன்பிச்சை, அதிமுக ஆய்க்குடி பேரூர் செயலாளா் முத்துக்குட்டி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories: