கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியா உள்பட 14 நாட்டின் விமானங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் தடை

துபாய்: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 14 நாட்டின் விமானங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் தடைவிதித்துள்ளது. இந்தியா உள்பட 14 நாட்டின் விமானங்களுக்கான தடையை ஐக்கிய அரபு அமீரகம் நீட்டித்துள்ளது. விமான போக்குவரத்தின் முக்கிய பகுதியாக ஐக்கிய அரபு அமீரகம் திகழ்கிறது. குறிப்பாக துபாய் பல்வேறு நாடுகளை இணைக்கும் மையமாக திகழ்கிறது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 24ம் தேதியில் இருந்து இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கான விமான சேவையை ஐக்கிய அரபு அமீரகம் தடைசெய்திருந்தது. கடந்த 19ம் தேதி, ஜூன் 27ம் தேதியில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்பட 14 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்திருந்தது. இந்த நிலையில் தற்போது தடைவிதித்துள்ளது.

இதனையடுத்து, தற்போதும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரழிவுகள் அவசரநிலை மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியாவுடன் பாகிஸ்தான், இலங்கை, லைபீரியா, நமிபியா, சியாரா லியோன், காங்கோ, உகாண்டா ஜாம்பியா, வியட்நாம், வங்காளதேசம், நேபாளம், நைஜீரியா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து விமான சேவைக்கும் தடையை நீட்டித்துள்ளது. ஆனால் சரக்கு விமானம், தொழில், வாடகை விமானம் ஆகியவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: