எமர்ஜென்ஸி காலத்தை நினைவூட்டும் இந்திரா காந்தி வாழ்க்கை படம்: சர்ச்சை நாயகி கங்கனா இயக்குகிறார்

மும்பை: நடிகை கங்கனா ரனவத் ஏற்கெனவே ‘மணிகர்னிகா’ என்ற படத்தை தயாரித்து, இயக்கி உள்ளார். சுதந்திர போராட்ட வீராங்கனையான ஜான்சி ராணியின் வாழ்க்கையை மையமாக கொண்ட இந்த படத்தை முதலில் தெலுங்கு இயக்குநர் கிரிஷ்தான் இயக்கினார். பின்னர் கங்கனாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படத்தில் இருந்து விலகிக் கொண்டார். இதனால் கங்கனாவே மீதி படத்தை இயக்கினார். இப்போது அவர் மீண்டும் படம் இயக்கத் திட்டமிட்டிருக்கிறார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ‘எமர்ஜென்சி’ என்ற பெயரில் இயக்குவதாக அறிவித்திருக்கிறார். இந்த படம் இந்திரா காந்தி கொண்டு வந்த அவசரநிலை பிரகடனத்தை மையமாக கொண்டு தயாராகிறது. இதில் இந்திரா காந்தி வேடத்தில் கங்கனாவே நடிக்கிறார்.

இது குறித்து கங்கனாவிடம் கேட்டபோது, கடந்த ஒரு வருடமாக இந்தப் படத்துக்கு திரைக்கதை அமைக்கும் பணி நடந்தது. அதில் நானும் கலந்துக் கொண்டேன். என்னை விட யாரும் இந்த படத்தை சிறப்பாக இயக்கி விட முடியாது என்பதால் நானே இயக்க முடிவு செய்திருக்கிறேன் என்கிறார். பாரதிய ஜனதா கட்சியின் தீவிர ஆதரவாளரான கங்கனா, இந்திரா காந்தியின் எமெர்ஜென்சி குறித்து படம் எடுப்பதால் இப்போதே அதுபற்றிய விவாதங்கள் தொடங்கி இருக்கின்றன.

Related Stories: