தடுப்பூசி போடுவதில் உள்ள மக்களின் தயக்கத்தை நீக்க பணியாற்றுங்கள்: காங்கிரசாருக்கு சோனியா உத்தரவு

புதுடெல்லி:  பொதுமக்களிடம் உள்ள கொரோனா தடுப்பூசி தயக்கத்தை போக்கும்படி கட்சியினரை சோனியா காந்தி கேட்டுக் கொண்டுள் ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி காணொலி மூலமாக கட்சியின் பொது செயலாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய சோனியா காந்தி, “இந்தாண்டு இறுதிக்குள் 75 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும்.  ஆனால், தடுப்பூசி போடுவதில் மக்களிடம் தயக்கம் இருக்கிறது. இதை போக்குவதற்கு காங்கிரஸ் தலைவர்கள் பணியாற்ற வேண்டும். மக்களின்  கொரோனா தடுப்பூசி தேவையை பூர்த்தி செய்வதற்கான பணிகளில் ஈடுபட வேண்டும். தடுப்பூசிகள் வீணாக்கப்படுவதை தடுக்க வேண்டும். கொரோனா தடுப்பூசிக்கான பதிவை உறுதி செய்ய வேண்டும்,’’ என்றார்.

Related Stories:

>