பெங்களூரில் காற்றாடி நூல் கழுத்தை அறுத்ததால் இளைஞர் படுகாயம்!: கைவிரல்கள் இரண்டை துண்டாக்கியது மாஞ்சா நூல்..!!

கர்நாடகா: காற்றாடி நூல் கழுத்தை அறுத்துவிட்டதால் படுகாயம் அடைந்த இளைஞர் ஒருவர், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் பட்டம் விடுதலை கைவிடுமாறு கோரிக்கை விடுக்கும் காணொலி இணையதளத்தில் வளம் வருகிறது. பெங்களூருவை சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று காலை ஆடுகுடி என்ற பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது நூல் அறுந்த பட்டம் ஒன்றின் மாஞ்சா கயிறு அவரது கழுத்தை சுற்றிக்கொண்டது. 

அதனை எடுக்க முற்பட்ட போது கழுத்தில் காயம் ஏற்பட்டதுடன் இரண்டு விரல்கள் துண்டிக்கப்படும் நிலையும் ஏற்பட்டது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், தயவு செய்து உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் பட்டம் விடுதலை கைவிடுமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார். 

பொது இடங்களில் பட்டம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இளைஞர் பெங்களூரு காவல்துறையை கேட்டுக் கொண்டிருக்கிறார். கர்நாடக மாநிலத்தில் பட்டம் விடுவது தடை செய்யப்பட்டிருந்தாலும் தடையை மீறி பெங்களூரு நகரில் பட்டம் விடுவதும், பலர் காயமடைவதும், சிலர் உயிரிழப்பதும் தொடர்கிறது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.  

Related Stories:

>