ஊட்டி, கூடலூர் தனியார் மருத்துவமனைக்கு தலா 5 ஆக்சிஜன் செறிவூட்டிகள் திமுக மாவட்ட செயலாளர் வழங்கினார்

ஊட்டி : ஊட்டி மற்றும் கூடலூர் தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை திமுக மாவட்ட செயலாளர் வழங்கினார். நீலகிரி  மாவட்டத்திலுள்ள மருத்துவமனைகளுக்கு சென்னையில் உள்ள ஆக்சன் எய்டு தொண்டு  நிறுவனம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியுள்ளது. இவற்றில் ஊட்டியில் உள்ள  நிர்மலா மருத்துவமனை, மற்றும் கூடலூர் புஷ்பகிரி மருத்துவமனை ஆகியவற்றிற்கு  தலா 5 ஆக்சிஜன்செறிவூட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி ஊட்டியில் நடந்தது.  

திமுக மாவட்ட செயலாளர் முபாரக் தலைமை வகித்து, இரு மருத்துவமனைகளுக்கு  ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினார்.  கிறிஸ்தவ நல்லடக்க  ஒருங்கிணைப்பு குழுவினருக்கு பாதுகாப்பு கவசங்கள், பல்ஸ் ஆக்சிமீட்டர்  கருவிகளையும் வழங்கினார். முன்னதாக ஆக்சன் எய்டு ஒருங்கிணைப்பாளர் அந்தோனி  வரவேற்றார்.

இதில் நிர்மலா மற்றும் புஸ்பகிரி மருத்துவமனைகளை சேர்ந்த  நிர்வாகிகள், மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட  பொருளாளர் நாசர்  அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, மாநில சிறுபான்மை பிரிவு துணை  செயலாளர் அன்வர்கான், தலைமை பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ், மருத்துவர்  அணி அமைப்பாளர் பவீஷ், ஆனந்தவள்ளி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இமயம்  சசிகுமார், மாவட்ட கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் காந்தல் ரவி, மாவட்ட  நெசவாளர் அணி அமைப்பாளர் ரவி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நாகராஜ்,  மாவட்ட பிரதிநிதி ராஜா, முன்னாள் நகர மன்ற உறுப்பினர் தம்பி இஸ்மாயில்  ஆகியோர் பங்கேற்றனர்.மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள்  எல்பிஎப் ஜெயராமன், அந்தோனி மேத்யூஸ், டேனியல்ராஜ் பிரபு, மல்லிகொரை  மூர்த்தி, மெல்ரோஸ் செல்வராஜ், கிளை செயலாளர்கள் ரவி, பாரதிராஜா, காங்கிரஸ்  கட்சியை சார்ந்த வின்சென்ட், மார்டின், சுரேஷ், ரவி உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர்.

Related Stories:

>