வாலிபரை கத்தியால் குத்திய வழக்கில் பெண் உட்பட 3 பேர் கைது

பெரம்பூர்: மாவா தகராறில் வாலிபரை கத்தியால் குத்திய வழக்கில் பெண் உள்பட மூவரை போலீசார் கைது செய்தனர். சென்னை புளியந்தோப்பு வஉசி நகர் 7வது தெருவை சேர்ந்தவர் பாலு. இவரது மகன் சரவணன் (21). இவர், நேற்று  முன்தினம் இரவு புளியந்தோப்பு ஆடுதொட்டி ஜேஜே.நகர் பின்புறம் உள்ள கடையில் சிகரெட் வாங்குவதற்காக நண்பருடன்  நடந்துசென்றபோது அதே பகுதியை சேர்ந்த பரத் மற்றும் அவரது நண்பர்களிடம் சரவணன் மாவா கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் இல்லை என்று கூறியதால் இருதரப்பு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பரத் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேரும் சேர்ந்து சரவணனை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டனர்.

படுகாயம் அடைந்த சரவணனை அப்பகுதியினர் மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து புகாரின்படி, புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்தநிலையில், புளியந்தோப்பு ஜேஜே நகரை சேர்ந்த லீலாவதி (38), பரத், தசரதன் ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர். இதுசம்பந்தமாக 2 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories:

>