கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 10,000 கன அடி நீர் திறப்பு

கர்நாடகா: கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 10,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தலா 5 ஆயிரம் கன அடி நீர் தமிழ்நாட்டுக்கு திறக்கப்படுகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு மாவட்டம் மற்றும் கேரளாவின் வயநாடு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமாகியுள்ளது. காலை நிலவரப்படி கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 19,714 கன அடியாக உள்ளது.

Related Stories: