தமிழகத்தில் 7,817 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் நேற்று 7,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்குள் குறைந்துள்ளது.  இது குறித்து சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் நேற்று 1,72,543 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 7,817 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக நேற்று கோவையில் மட்டும் 904 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தற்போது மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் இருப்பவர்கள்  69,372.  அதன்படி சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்திற்குள் குறைந்துள்ளது.  182 பேர் நேற்று உயிரிழந்தனர். இதையடுத்து மொத்தம் 31,197 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய மொத்த பாதிப்பில் சென்னையில் 455 பேர், செங்கல்பட்டு 328, கோவை 904,  காஞ்சிபுரம் 144, சேலம் 517, தஞ்சாவூர் 370, திருவள்ளூர் 204, திருப்பூர் 427 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>