இன்ஜினியரிடம் ரூ.2 லட்சம் மோசடி

அண்ணாநகர்: முகப்பேர் கோல்டன் ஜார்ஜ் நகரை சேர்ந்தவர் திவாகர் (24), இன்ஜினியர். இவர், ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஆன்லைன் மூலம் டேட்டா என்ட்ரி வேலை செய்துள்ளார். இந்நிலையில், அந்நிறுவனத்தை சேர்ந்த ஒரு நபர், தொலைபேசியில் திவாகரை தொடர்பு கொண்டு, ‘நீங்கள் கவனக்குறைவாக செய்த வேலையால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, எங்களுக்கு ரூ.20 லட்சம் நஷ்டஈடு தரவேண்டும். இல்லையெனில் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம், என மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன திவாகர், ரூ.2 லட்சத்தை அந்நிறுவனத்துக்கு செலுத்தினார். அதன்பிறகு அந்நிறுவனத்தின் ஆன்லைன் தொடர்பு முடங்கியது. ஏமாற்றப்பட்டதை அறிந்த திவாகர் ஜெ.ஜெ.நகர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

Related Stories:

>