பாலியல் புகார்கள் மீது 24 மணி நேரத்தில் வழக்கு: தமிழக அரசு உத்தரவு

வேலூர்: தமிழகத்தில் பாலியல் புகார்கள் மீது 24 மணி நேரத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அதனை குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு பிரிவு கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் பாலியல் புகார்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. இதில் அமைச்சர்கள் முதல் அடிமட்ட தொழிலாளர்கள் வரையில் சிக்குகின்றனர். அதோடு பெரும்பாலான காவல்நிலையங்களில் பாலியல் குற்றங்கள் தொடர்பாக ஏதேனும் புகார்கள் கொடுத்தல் சம்மந்தப்பட்ட காவல்நிலையங்களில் அந்த வழக்கினை சரியாக விசாரிப்பதில்லை என்ற புகார்கள் அடிக்கடி எழுவது உண்டு. அதேசமயம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பாலியல் குற்றங்கள், பள்ளிகளில் நடந்த பாலியல் குற்றங்கள் என்று தற்போது வெளிவரத்தொடங்கியுள்ளது.

மேலும் முன்னாள் மாணவிகள் பலர் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டது குறித்து ஆன்லைனிலும் புகார்கள் அளித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் ெதாடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டால், அந்த புகார்கள் மீது அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் உரிய விசாரணை நடத்தி 24 மணி நேரத்தில் வழக்கு பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை அந்தந்த மாவட்டங்களில் உள்ள குழந்தைகள் மற்றும் ெபண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு போலீசார் கண்காணிக்க ேவண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேபோல் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள மகளிர் காவல்நிலையங்களில் பாலியல் தொடர்பான புகார்கள் மீது 24மணி நேரத்தில் வழக்கு பதிவுசெய்யப்படுகிறதா? என்று கண்காணித்து வருகிறோம் என்று வேலூர் மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவு டிஎஸ்பி சரவணன் தெரிவித்தார்.

Related Stories:

>