குடும்பத்தின் கதி என்னாகுமோ? இன்சூரன்ஸ் எடுக்கும் இளைஞர்கள் மூன்றே மாதங்களில் 30% அதிகரிப்பு

புதுடெல்லி: கொரோனா பீதியால் கடந்த 3 மாதங்களின் உயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்த இளைஞர்களின் எண்ணி்ககை 30 சதவீதம்  அதிகமாகி உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கிறது. கொரோனா 2வது அலையில் மட்டுமே கடந்த மூன்றரை மாதங்களி்ல் 2.3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். முதல் அலையை விட 2வது அலையில் இளைஞர்கள் அதிகளவில் பாதித்துள்ளனர். இந்த 2வது அலையின் உக்கிரமும், அடுத்து 3வது அலை இதை விட மோசமாக தாக்கும் என்ற பீதியும் இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது.

தொற்றால் பாதித்து தங்கள் உயிருக்கு ஏதாவது நேர்ந்தால், குடும்பத்தின் கதி என்னாகுமோ என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த 3 மாதங்களில் உயிர் காப்பீடு திட்டத்தில் இணைந்த இளைஞர்களின் எண்ணி்க்கை, அதற்கு முந்தைய மூன்று மாதங்களை விட  திடீரென 30 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, 25 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த காப்பீடு திட்டத்தில் அதிகமாக இணைந்துள்ளனர். அதேபோல், ‘டெர்ம் இன்சூரன்ஸ்’ எனப்படும் கால வரையறை காப்பீடு திட்டத்தில் இணைந்த இளைஞர்களின் சதவீதம் 70 சதவீதம் அதிகமாகி இருப்பதாக காப்பீடு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Related Stories: