சிவசங்கர் பாபா டெல்லியில் கைது: சுசில்ஹரி பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்: அரசுக்கு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் பரிந்துரை

சென்னை:  சுசில்ஹரி பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று காஞ்சிபுரம் மற்றும்  செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நலக்குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.  சென்னை புறநகர்ப் பகுதியான கேளம்பாக்கத்தில் பிரபல சாமியார் சிவசங்கர் பாபாவுக்கு சொந்தமான சுசில்ஹரி பன்னாட்டு உறைவிடப் பள்ளி உள்ளது. இதன் நிறுவனர் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக டெல்லியில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுசில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளி மாணவிகள் கொடுத்த பாலியல் புகார் மீது தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் தங்களின் மாற்றுச் சான்றிதழை திரும்பக் கேட்டும், கல்விக் கட்டணத்தை திரும்பக் கொடுக்க மனு செய்து வருகின்றனர்.

மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அப்பள்ளியில் இருந்து வெளியேறும் மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழை உடனே வழங்க வேண்டும்.  இவ்வாறு வெளியேறும் மாணவர்கள் வேறு பள்ளியில் சேர தமிழக அரசு உதவிட வேண்டும். மேலும், பள்ளியின் தாளாளரே மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளதாக புகார் எழுந்துள்ளதாலும், அதற்கு ஆசிரியைகள், நிர்வாகிகள் உடந்தையாக இருந்ததாகவும் புகார் பெறப்பட்டுள்ளது.  எனவே,  இப்பள்ளியின் அங்கீகாரத்தை மாநில கல்வித்துறை ரத்து செய்ய வேண்டு அல்லது இப்பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டுமெனவும் செங்கல்பட்டு,் காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் நலக்குழுமம் பரிந்துரைத்துள்ளது.

Related Stories:

>