நாளை மறுநாள் நேரில் ஆஜராக டிவிட்டர் நிர்வாகத்துக்கு நாடாளுமன்ற குழு உத்தரவு

புதுடெல்லி: மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021ஐ அறிமுகப்படுத்தியது.  இதன்படி வாட்ஸ்ஆப், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம்  உள்ளிட்ட சமூக ஊடகங்கள் பயனர்களின் புகார்கள் குறித்து விசாரிப்பதற்கு இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிகள் இதில் இடம்பெற்று இருந்தது.  இதை கூகுள், பேஸ்புக் உள்ளிட்டவை ஏற்றுக்கொண்டன. டிவிட்டர் நிறுவனம் மட்டும் இதற்கு ஆட்சேபனை தெரிவித்தது. பின்னர், மத்திய அரசு இறுதி எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, கடந்த 9ம் தேதி டிவிட்டர் ஒரு மக்கள் தொடர்பு அதிகாரி, குறை தீர்ப்பு அதிகாரியை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதாக அறிவித்தது. இந்நிலையில், டிவிட்டர் நிறுவனத்துக்கு மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, வரும் 18ம் தேதி நேரில் ஆஜராகும்படி டிவிட்டர் நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இதில்,பொதுமக்களின் உரிமை பாதுகாப்பு, தகவல்கள் தவறாக பயன்படுத்துவதை தடுப்பது  போன்றவை பற்றி அதனிடம் விளக்கம் கேட்கப்பட உள்ளது.

Related Stories: