பொதுமக்கள் புகார் அளிக்க வசதியாக முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம் தொடக்கம்

சென்னை:  முதல்வரின் தேர்தல் பிரசாரத்தில், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது. இத்துறையில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், மக்கள் புகார் அளிக்க முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. //cmcell.tn.gov.in/register.php என்ற முகவரியில், தங்களின் புகார்களை அளிக்கலாம். அந்த புகார் சம்பந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. தபால் மூலம் புகார்கள் அனுப்பலாம். //chief Minister’s special cell, Secretariat, chennai-9 மற்றும் 044-25671764 என்ற தொலைபேசி எண்ணிலும், cmcell@tn.gov.in என்ற இமெயில் முகவரியிலும் இணையதளம் மூலம் மக்கள் புகார்களை அளிக்கலாம். அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Related Stories: