சென்னை, ஜூன் 4: தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி 17 வயதிலேயே 2 முறை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்த நடிகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கேரள நடிகை சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கேரளாவை சேர்ந்த நடிகை ஐஸ்வர்யா(19) என்பவர் நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:நான் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்து வருகிறேன். கடந்த 2024ம் ஆண்டு ‘ஜெஸ்ஸி’ என்ற படத்தில் நான் குழந்தை நட்சத்திரமாக, பள்ளி மாணவியாக நடித்ேதன். அந்த படத்தின் கதாநாயகனாக ஆபிரகாம் ஜோஸ்வா என்பவர் அறிமுகமானார். நானும் அவரும் நட்பாக பழகி வந்தோம்.
பிறகு என்னை அவர் காதலிப்பதாக கூறினார். அப்போது எனக்கு 17 வயது என்பதால் அதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன். எனக்கு அம்மா மட்டும் தான் அப்பா இல்லை. இதனால் நான் ஆபிரகாம் ஜோஸ்வாவை காதலித்தேன். பிறகு என்னை உல்லாசமாக இருக்க அழைத்தார். அதற்கு நான் வேண்டாம் என்று சொன்னதும், நாம் இருவரும் ஒன்றாக இருந்தால் தான் எங்கள் குடும்பத்தில் உன்னை திருமணம் செய்ய சம்மதிப்பார்கள் என்று கூறினார். பிறகு அவர் ஆசைவார்த்தை கூறி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசாட்டிற்கு அடிக்கடி அழைத்து சென்று என்னுடன் உல்லாசமாக இருந்தார். இதனால் நான் கர்ப்பமானேன். உடனே அவர் கலைத்துவிடு என்று கூறி மாத்திரை வாங்கி கொடுத்து கலைத்துவிட்டார். அதன் பிறகும் நான் கர்ப்பமானேன். இந்த முறை என்னை அவர் கர்ப்பத்தை கலைக்க வலியுறுத்தினார். ஆனால் நான் கலைக்க வில்லை.
இதனால் அவர் என்னை கடுமையாக தாக்கி கையை உடைத்து, மருத்துவமனையில் அனுமதித்தார். டாக்டர்களிடம் நான் கீழே விழுந்துவிட்டதாக கூறி ஏமாற்றி கர்ப்பத்தை கலைத்துவிட்டார். அப்போது என்னை ஏமாற்றி ஜிபே மூலம் ரூ.60 ஆயிரம் பணம், ரொக்கமாக ரூ.1.80 லட்சம் பணத்தை பெற்று கொண்டார்.
பிறகு என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.இதுகுறித்து நான் கேட்டபோது, ஆபிரகாம் ஜோஸ்வா எனது அப்பாவுக்கு இருக்கும் செல்வாக்கை வைத்து உன்னை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினர். இதனால் அச்சமடைந்த நாங்கள் புகார் அளிக்கவில்லை. தற்போது என்னை தொடர்பு கொண்டு புகார் கொடுத்தால் கொலை செய்துவிடுவேன் என்று அவரது தந்தை அருண்தாஸ் அவரது அண்ணன் கார்த்திக் மற்றும் ஆபிரகாம் ஜோஸ்வா மிரட்டி வருகின்றனர். எனவே அவர்களிடம் இருந்து எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும், என்னை திருமணம் செய்வதாக 17 வயதில் இருந்து ஏமாற்றி உல்லாசமாக இருந்து 2 முறை கருக்கலைப்பு ெசய்த ஆபிரகாம் ஜோஸ்வா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் கூறியுள்ளார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
