ஓரின சேர்க்கைக்கு ஒத்துழைக்காததால் பள்ளி மாணவன் கழுத்தறுத்து கொலை

 

திருப்புத்தூர், ஜூன் 9: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயதான 10ம் வகுப்பு மாணவன், கடந்த 4ம் தேதி நண்பர்களால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பாகனேரி அருகே இளந்தமங்கலம் பகுதியை சேர்ந்த அரவிந்த் (25), 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் திருப்புத்தூர் நகர் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: கடந்த ஜூன் 4ம் ேததி 10ம் வகுப்பு மாணவர், தனது நண்பர்களான 17 வயதான 2 பேர், அரவிந்த் ஆகியோருடன் சேரந்து ஒன்றாக மது அருந்தியுள்ளார். அப்போது மாணவரை, அரவிந்த் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 2 பேர், ஓரின சேர்க்கைக்கு அழைத்துள்ளனர். அதற்கு மாணவர் ஒத்துழைக்கவில்லை. இதையடுத்து 2 பேரும் மாணவரை தாக்கியுள்ளனர். இதைக்கண்டு கோபத்தில் 17 வயதான மற்றொரு சிறுவன், அங்கிருந்து சென்று விட்டார். மாணவரை தாக்கியதோடு 2 பேரும் துண்டால் கழுத்தையும் நெரித்துள்ளனர். மாணவர் மயக்க நிலையில் இருந்தபோது, கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளனர். இதையடுத்து இருவர் மீதும் போக்சோ மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான அரவிந்த்(25), மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 17 வயது சிறுவன் சிறுவர் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்று தெரிவித்தனர்.

Related Stories: