இந்தியாவில் 100 சதவீதம் தடுப்பூசி போட்ட முதல் கிராமம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் உள்ள பாந்திபோரா மாவட்டத்தில் இருந்து 28 கிலோ தூரத்தில் உள்ள வெயன் கிராமத்தில் 18 வயதுக்கு மேல் உள்ள 362 பேருக்கு  தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதற்கு முழு காரணம் சுகாதார ஊழியர்களின் அர்ப்பணிப்பு. இந்த கிராமத்தில் இணையம் வசதி  இல்லாததால் தடுப்பூசி பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், சுகாதார ஊழியர்கள் கிராமத்திற்கு சென்று தடுப்பூசி போட முடிவு செய்தனர். அதன்படி, பாந்திபோரா மாவட்டத்தில் இருந்து அத்வத்டூ வரை சுமார் 10 கிலோ சாலை மார்க்கமாக வந்த சுகாதார ஊழியர்கள், அதன் பிறகு 18 கிலோ மீட்டர் கடினமான மலைபாதை, ஆற்றை கடந்து நடை பயணமாக சென்று வெயன் கிராமத்தில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளனர். நாட்டில் முதன் முதலாக இந்த கிராமத்தில்தான் 100% தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் 45 வயதுக்கும் மேற்பட்டவர்கள் 70% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Related Stories: