பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் அலெக்சாண்டர் ஸ்வரெவ்..! செரீனா அதிர்ச்சி தோல்வி

பாரீஸ்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று அதிகாலை நடந்த 4வது சுற்று போட்டியில், 6ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரெவ் (24), ஜப்பானின் நிஷிகோரி(31) உடன் மோதினார். இதில் ஸ்வரெவ் 6-4, 6-1, 6-1 என எளிதாக வெற்றிபெற்று கால் இறுதிக்குள் நுழைந்தார். ஸ்பெயினின் டேவிடோவிச் போகினா, ரஷ்யாவின் டேனியல் மெட்வடேவ், கிரீசின் சிட்சிபாஸ் ஆகியோரும் கால்இறுதிக்குள் நுழைந்தனர்.

மகளிர் ஒற்றையரில் 4வது சுற்றில் 7ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் (39), 21 வயதான கஜகஸ்தானின் எலெனா ரைபாகினாவுடன் மோதினார். இதில் எலெனா 6-3,7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்குள் நுழைந்தார். ரஷ்யாவின் அனஸ்தேசியா, பெலாரசின் விக்டோரியா அசரென்காவை வீழ்த்தினார். ஸ்பெயினின் பவுலா படோசா, ஸ்லோவேனியா தமரா ஜிதான்செக் ஆகியோரும் கால்இறுதிக்குள் நுழைந்தனர்.

Related Stories: