மும்பை: சிசிஐ வெஸ்டர்ன் இந்தியா ஸ்குவாஷ் போட்டியில் நேற்று, ஜோஷ்னா சின்னப்பா, வீர் சோத்ரானி அபார வெற்றி பெற்று அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர். மும்பையில், வெஸ்டர்ன் இந்தியா ஸ்குவாஷ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் ஜோஷ்னா சின்னப்பா, ரீவா நிமல்கர் மோதினர். இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஜோஷ்னா, 11-4, 11-3, 11-5 என்ற நேர் செட் கணக்கில் அபார வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதியில் வீர் சோத்ரானி, மகேஷ் மங்கவோன்கர் மோதினர். இப்போட்டியில் முதல் செட்டை, 11-6 என்ற புள்ளிக் கணக்கில் சோத்ரானி வென்றார். இரண்டாவது செட்டில் சுதாரித்து ஆடிய மகேஷ், 12-10 என்ற புள்ளிக்கணக்கில் வசப்படுத்தினார். இருப்பினும் அடுத்த இரு செட்களில் அதிரடி காட்டிய சோத்ரானி, 11-3, 11-5 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்களை கைப்பற்றினார். அதனால், 3-1 என்ற செட் கணக்கில் வென்ற வீர் சோத்ரானி அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.
வெஸ்டர்ன் இந்தியா ஸ்குவாஷ்: ஜோஷ்னா சின்னப்பா அரையிறுதிக்கு தகுதி
- மேற்கு இந்திய ஸ்குவாஷ்
- ஜோஷ்னா சின்னப்பா
- மும்பை
- வீர் சோத்ரானி
- CCI மேற்கு இந்தியா ஸ்குவாஷ் போட்டி
- மேற்கு இந்திய ஸ்குவாஷ் போட்டி
