பாஜக அலுவலகம் அருகே 51 கையெறி குண்டுகள் பறிமுதல்: கொல்கத்தாவில் பரபரப்பு

கொல்கத்தா: மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பாஜக அலுவலகம் அருகே மர்ம பிளாஸ்டிக் மூட்டை கிடப்பதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போலீசார் கைப்பற்ற பிளாஸ்டிக் சாக்கை பிரித்து பார்த்தனர். அதிலிருந்த 51 கையெறி குண்டுகளை போலீசார் கைப்பற்றினர். சாக்கின் உள்ளே ஒரு மரப்பெட்டியின் செய்தித்தாளால் மூடப்பட்ட பழங்களின் கூடையில் வைக்கப்பட்டிருந்தது. தகவலறிந்த வெடிகுண்டு அகற்றும் குழுவினர், புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றப்பட்ட கையெறி குண்டு தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக, கொல்கத்தாவில் நேற்றிரவு பதற்றம் ஏற்பட்டது. ஏற்கனவே கடந்த பிப். 17ம் தேதி சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் மம்தா கட்சியை சேர்ந்த தொழிலாளர் துறை அமைச்சர் ஜாகிர் உசேன் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் உட்பட 22 பேர், அந்த தாக்குதலில் பலத்த காயமடைந்தார். இவ்வழக்கை தேசிய புலனாய்வு பிரிவு விசாரித்து வருகிறது. அதேபோல், மூன்றாம் கட்ட வாக்குப்பதிவுக்கு முன்பாக, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பாருய்பூர் பகுதியில் 40க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் மீட்கப்பட்டன.

மார்ச் 26ம் தேதி பெனிபுகூர் சிஐடி சாலையில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தின் அருகே, 26 நாட்டு வெடிகுண்டுகள் மீட்கப்பட்டன. அடுத்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, நரேந்திரபூர் பகுதியில் 56 குண்டுகள் போலீசாரால் மீட்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: