தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள்: கனடாவில் மூடப்பட்ட பள்ளியில் கொடூரம்

ஒட்டாவா: கனடாவில் பூர்வகுடி மக்களின் குழந்தைகளை இனப்படுகொலை செய்து பள்ளியில் புதைத்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் கம்லூப்ஸ் என்ற இடத்தில் பூர்வகுடி மக்களின் குழந்தைகள் கல்வி பயிலும் வகையில் 1890-ம் ஆண்டுகளில் ஐரோப்பியர்கள் பள்ளி ஒன்றை தொடங்கினர். அந்த பள்ளியில் விடுதி தொடங்கி அதில் குழந்தைகளை தங்க வைத்து படிக்க வைத்துள்ளனர். இந்த பள்ளியில் பயிலும் குழந்தைகள் திடீரென காணாமல் போவதும், வீடு திரும்பாமல் போவதும், அடிக்கடி நடந்து வந்துள்ளது. புகார்கள் அதிகம் எழுந்ததால் 1969-ம் ஆண்டில் இந்த பள்ளி மூடப்பட்டது. தற்போது சிதிலமடைந்து காணப்படும் இந்த பள்ளியில் ரேடார் உதவியுடன் ஆய்வு நடத்திய ஒருவர் 215 எலும்புக்கூடுகள் புதைந்து கிடப்பதை கண்டுபிடித்தார்.

இந்த எலும்புக்கூடுகள் அனைத்தும் 3 முதல் 10 வயது குழந்தைகளுடையது என்பதும் தெரிய வந்தது. இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுல கனடா பிரதமர்; கனடா வரலாற்றில் வெட்கப்படவேண்டிய நிகழ்வு நடந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். கருப்பு காலக்கட்டத்தை நினைவு படுத்தினால் மிகவும் வேதனை அளிப்பதாக அவர் கூறியுள்ளார். பள்ளி அருகே பூர்வகுடிகள் வசிக்கும் இடங்களில் கனடா போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். விரைவில் உண்மை வெளிவரக்கூடும் என்று நம்பப்படுகிறது.

Related Stories: