மயிலாடுதுறையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த வாலிபர் கைது

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். கோவை மரக்கடை சந்தன்தெருவை சேர்ந்த அப்துல் ரகுமான் மகன் முகமது ஆசிக்(30). ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த இவர், கோவையில் கடந்த 2018ம் ஆண்டு மத மோதலை உருவாக்குவதற்காக திட்டம் தீட்டியதாக, தேசிய புலனாய்வு துறை (என்.ஐ.ஏ.) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது இந்த வழக்கு சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஜாமீனில் வெளிவந்த முகமது ஆசிக், மயிலாடுதுறை மாவட்டம் நீடூரில் தங்கியிருந்து, அங்குள்ள ஒரு கோழி கடையில் வேலை பார்த்து வந்தார்.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கோர்ட்டில் ஆஜராகும்படி பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் பலமுறை முகமது ஆசிக்குக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதனையடுத்து பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் நேற்றுமுன்தினம் நள்ளிரவு மயிலாடுதுறை வந்தனர். பின்னர் மயிலாடுதுறை போலீசார் உதவியுடன் நீடூரில் தங்கியிருந்து முகமது ஆசிக்கை கைது செய்து பலத்த பாதுகாப்புடன் சென்னை அழைத்து சென்றனர்.

Related Stories: