அதிதீவிர புயலாக இருந்த யாஸ் ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுவிழந்துள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: அதிதீவிர புயலாக இருந்த யாஸ் ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுவிழந்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. நேற்று காலை 9.15 மணிக்கு ஒடிசா மாநிலம் பாத்ரக் மாவட்டம் தாம்ரா துறைமுகத்தின் வடபகுதியில் புயல் கரையை கடக்கத்தொடங்கியது. புயலின் கண் பகுதி கரையை கடந்தபோது, மணிக்கு 130 கி.மீ. முதல் 145 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. 2 மீட்டர் முதல் 3 மீட்டர் உயரத்துக்கு அலை எழும்பியது. அத்துடன் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. 

பாலசோர், பாத்ரக் ஆகிய மாவட்டங்களின் கடலோர கிராமங்களில் கடல் நீர் புகுந்தது. கனமழை காரணமாக, புதாபலாங் ஆற்றில் நீர்மட்டம் 21 மீட்டர் அளவுக்கு உயர்ந்தது. வங்க கடலில் சில நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது. ‘யாஸ்’ என்று பெயரிடப்பட்ட அந்த புயல், மிக தீவிர புயலாக நேற்று முன்தினம் உருவெடுத்தது. வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் மணிக்கு 17 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது.

Related Stories: