தஞ்சை: பட்டுக்கோட்டையில் கடந்த 24 மணி நேரத்தில் 16 செ.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து வெப்பத்தை தனித்து வருகிறது. தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. காரைக்காலில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
இன்று காலையில் மழை குறைந்து சாரல் மழை பெய்து வருகிறது. பட்டுக்கோட்டையில் கடந்த 24 மணி நேரத்தில் 16 செ.மீ. மழை கொட்டிக்கு தீர்த்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டைக்கு அடுத்தபடியாக அதிராம்பட்டினத்தில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. பட்டுக்கோட்டை அருகே மதுக்கூரில் 10.6 செ.மீ. மழை பெய்துள்ளது. தஞ்சை நகரில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தஞ்சையில் வெப்பம் தணிந்து குளிர் நிலவுகிறது. மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயரக்கூடும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post டெல்டாவில் விடிய விடிய கனமழை: பட்டுக்கோட்டையில் 16 செ.மீ. மழை பதிவு appeared first on Dinakaran.