ஹமாஸ் குண்டு வீச்சில் பலி: கேரள நர்சுக்கு இஸ்ரேல் கவுரவ குடியுரிமை

திருவனந்தபுரம்: ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட கேரளாவை சேர்ந்த நர்ஸ் சவுமியாவுக்கு இஸ்ரேல் அரசு கவுரவ குடியுரிமை வழங்கியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கீரித்தோடு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி சவுமியா. இஸ்ரேலில் நர்சாக பணியாற்றினார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹமாஸ் நடத்திய ராக்கெட் தாக்குலில் சவுமியா இறந்தார். கடந்த 18ம் தேதி சவுமியாவின் கணவர் சந்தோஷை, இஸ்ரேல் அதிபர் ரூவன்ரிவ்லின் போனில் அழைத்து ஆறுதல் கூறினார். மேலும் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ஜெனாதன் சட்காவும் பேசினார். இந்த நிலையில் நர்ஸ் சவுமியா சந்தோஷுக்கு இஸ்ரேல் அரசு கவுரவ குடியுரிமை வழங்கியுள்ளது. இந்த தகவலை இஸ்ேரல் துணைத்தூதர் ரோணி யதீதியா, சவுமியா குடும்பத்தினரிடம் போனில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இஸ்ரேல் துணைத்தூதர் ரோணி யதீதியா கூறுகையில், ‘‘நர்ஸ் சவுமியா சந்தோஷுக்கு இஸ்ரேல் அரசு கவுரவ குடியுரிமை வழங்கியுள்ளது. இதை பெற சவுமியா மிகவும் தகுதியானவர் என எங்கள் நாட்டு மக்கள் கருதுகின்றனர். அவரை இஸ்ரேல் மக்கள் தங்களில் ஒருவராகவே கருதுகின்றனர். அவரது குடும்பத்ைத இஸ்ேரல் பாதுகாக்கும். தேசிய இன்ஸ்சூரன்ஸ் திட்டத்தின்கீழ் அவரது குடும்பத்துக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கப்படும்’’ என்றார்.

Related Stories: