பெற்றோருக்கு கொரோனா தொற்றால் ஐபிஎல்லில் இருந்து விலக திட்டமிட்டேன்: ஆர்சிபி சுழல் சாஹல் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல். ஐபிஎல்லில் இவர் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். அண்மையில் இவரின் பெற்றோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதில் இருந்து  தாயார் மீண்டுள்ள நிலையில், தந்தை மோசமான நிலையில், குர்கானில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதுபற்றி சாஹல் கூறுகையில், என் பெற்றோர் நோய்த்தொற்றுக்குள்ளான செய்தியைக் கேட்டபோது ஐபிஎல்லில் இருந்து ஓய்வு எடுக்க திட்டமிட்டிருந்தேன். பெற்றோர் வீட்டில் தனியாக இருக்கும்போது விளையாட்டில் கவனம் செலுத்துவது கடினம்.

ஆனால் அதற்குள் ஐபிஎல் தொடர் நிறுத்தப்பட்டது. எனது தந்தையின் ஆக்ஸிஜன் அளவு 95-96 ஆக உள்ளது, இது எங்களுக்கு ஒரு நிம்மதி. அவர் குணமடைய இன்னும் 7-10 நாட்கள் ஆகும், என்றார். இதனிடையே சாஹலின் மனைவி தனுஸ்ரீ, இன்ஸ்டாகிராமில் கோஹ்லியுடன் இருக்கும் படத்தை வெளியிட்டு,ஐபிஎல்லில்,  வேடிக்கையான காலை உரையாடல்கள் முதல் போட்டியை வேடிக்கை பார்ப்பது வரை அனைத்தும் மிகவும் மகிழ்ச்சிகரமானதாகவும், சிறந்த அறிவு பரிமாற்றமாகவும் இருந்தது என தெரிவித்துள்ளார். 

Related Stories: