பீகாரில் சாக்கடை நீரால் நிரம்பி வழியும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை: மருத்துவமனை வளாகத்தில் பன்றிகள் மேயும் அவலம்

தர்பங்கா: பிகாரில் உள்ள தர்பங்கா அரசு மருத்துவமனை வளாகத்தில் சாக்கடை நீர் வழிந்தோடுவதுடன் பன்றிகள் மேயும் கட்சி காண்பவரை கலங்க செய்துள்ளது. ஏராளமான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெரும் இந்த மருத்துவமனையின் வளாகத்தில் சாக்கடை நீர் தேங்கி காணப்படுகிறது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மருத்துவமனைக்குள் செல்வதற்கே அவதிப்படும் நிலை உருவாகியுள்ளது.

சாதாரண மழை பெய்தாலே மருத்துவமனை வளாகங்கள் முழுவதும் சாக்கடை நீரால் நிரம்பி வழியும் என தெரிவிக்கும் அதிகாரிகள் தொடர் மழை பெய்தால் மருத்துவமனை கீழ் தளம் முழுவதுமாக மூழ்கிவிடும் என வேதனை தெரிவிக்கின்றனர். வெள்ளம் தேங்கி சாக்கடை போன்று காணப்படுவதால் பன்றிகள் மேயும் நிலையும், புற்பூண்டுகள் முளைத்து காணப்படுவதால் பசுக்கள் மேயும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனை தொடங்கி 100 ஆண்டுகளை  நெருங்கியும், இதுவரை புனரமைப்பு பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்ன அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பழுதடைந்த கட்டிடங்கள், மருத்துவமனை வளாகத்தில் கொட்டப்படும் குப்பைகள், அந்த குப்பைகளை வாழ்விடமாக கொண்ட பன்றிகள், பயன்படுத்த முடியாத நிலையில் துரும்பாக காணப்படும் ஆம்புலன்ஸுகள் என மருத்துவமனை மற்றும் அதன் வளாகம் காண்போரை கண்கலங்க செய்கிறது. மருத்துவமனையின் உள்பகுதியிலும் முறையான வசதிகள் இல்லை என்றே நோயாளிகள் புகார் தெரிவிக்கின்றார்.

கொரோனா பரவல் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் உயிர்காக்க மருத்துவமனைகளை  தேடிவரும் நோயாளிகள் அதன் நிலையால் புதிய நோயோடு திம்மி திரும்பி வேண்டிய நிலை வருமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. தர்பங்கா மருத்துவமனை மட்டுமல்லாமல் பிகாரில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகளின் நிலை மோசமாகவே உள்ளது என நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: