4,500 மரணங்களை மறைத்த டெல்லி அரசு: ஆதாரத்துடன் அம்பலம்

புதுடெல்லி: டெல்லியில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் கடந்த மாதம் துவங்கி இம்மாதம் துவக்கம் வரை உச்சத்தில் இருந்தது. கடந்த ஏப்ரல் 18ம் தேதி முதல் மே மாதம 11ம் தேதி வரை டெல்லியில் தினசரி 335 பேர் வீதம் மொத்தம் 8,050 பேர் பலியானதாக டெல்லி மாநில அரசு புள்ளிவிவரம் வெளியிட்டது. ஆனால், இந்த கணக்கிற்கும், டெல்லி மாநகராட்சியின் கணக்கிற்கும் பெரும் இடைவெளி காணப்பட்டது. டெல்லி மாநகராட்சியின் புள்ளிவிவரப்படி இந்த 24 நாட்களில் டெல்லியில் 12,833 பேர் கொரோனாவால் உயிரிழந்துவிட்டனர். டெல்லி மயானங்களில் தினமும் சராசரியாக 534 சடலங்களுக்கு இறுதி சடங்குகள் நடந்தது. அதாவது ஒரு மணி நேரத்துக்கு 22 சடலங்கள் தகனம் செய்யப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதன் மூலம் டெல்லி அரசு மொத்தம் 4,783 மரணங்களை மறைத்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Related Stories: