துபாய் விமானத்தில் ரூ.89.17 லட்சம் தங்கம் கடத்தல்: 2 பேர் கைது

மீனம்பாக்கம்: துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் நேற்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர்.  அப்போது சென்னையை  சேர்ந்த முகமது அஸ்ரப்(21) என்ற பயணி, தன்னிடம் சுங்கவரி செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறினார்.  அதோடு வேகமாக கிரீன் சேனல் வழியாக வெளியே சென்றார். இதனால் அவர் மீது சுங்கத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, வெளியே சென்ற முகமது அஸ்ரப்பை மீண்டும் உள்ளே அழைத்து வந்து, உடமைகளை  சோதனையிட்டனர்.

உடமைகளில் எதுவும் இல்லை. ஆனாலும் சந்தேகம் தீராமல், அவரை தனி அறைக்கு அழைத்து சென்று முழுமையாக சோதித்தனர். அப்போது அவருடைய இரு கால்களிலும் பெரிய பேண்டேய்ட் துணி ஒட்டப்பட்டிருந்தது.  சந்தேகத்தில் அந்த பேண்டேய்ட் துணியை பிரித்து பார்த்தனர். அதன் உள்ளே தங்கக்கட்டிகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. மொத்தம் 1.8 கிலோ தங்கத்தை கைப்பற்றினர். அதன் சர்வதேச மதிப்பு ₹89.17 லட்சம். இதனையடுத்து,  முகமது அஸ்ரபிடம் மேலும் விசாரணை நடத்தினர். அப்போது தன்னை தங்கம் கடத்தல் கும்பலை சேர்ந்த முகமது இப்ராகீம்(39) என்பவருக்காகத்தான் இந்த தங்கத்தை கடத்தி வருவதாகவும், அவர் தற்போது விமான நிலையத்திற்கு வெளியே  நிற்பதாகவும் கூறினார். இதையடுத்து சுங்கத்துறையினர் இப்ராகீமையும் கைது செய்த

னர். தொடர்ந்து இருவரிடமும் சுங்கத்துறையினர் மேலும் விசாரணை நடத்துகின்றனர்.

Related Stories: