மத்திய விஸ்டா திட்டத்தின் கீழ் பிரதமரின் வீடு கட்டுவதை புகைப்படம் எடுக்க தடை

புதுடெல்லி: மத்திய விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்ற கட்டிம், பிரதமருக்கு புதிய வீடு என ராஜபாதையில் 3 கிமீ தொலைவுக்கு பல்வேறு கட்டுமானப் பணிகள் நடக்கின்றன. பல ஆயிரம் கோடி செலவில் இத்திட்டப்பணிகள் கொரோனா சுனாமி அலையிலும் நிறுத்தப்படவில்லை. இத்திட்டத்தை நிறுத்தி வைத்து இதற்கான நிதியை கொரோனா தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், டெல்லி இந்தியா கேட் பகுதியில் மத்திய விஸ்டா திட்டப் பணிகள் நடக்கும் இடத்தின் அருகில் சில எச்சரிக்கை பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் கட்டுமான பணிகளை புகைப்படம் எடுக்கவோ, வீடியோ எடுக்கவோ கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டால் எந்த பதிலும் சொல்வதில்லை.

Related Stories: