கொரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் 6 முதல் 8 வாரங்கள் ஊரடங்கு தேவை: ICMR தகவல்

டெல்லி: கொரோனா தொற்று பாதிப்பு 10 சதவீதத்திற்கும் மேல் உள்ள மாவட்டங்களில் 6 முதல் 8 வாரங்கள் ஊரடங்கு தேவை என்று இந்திய மருத்துவர் ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார். மேலும், தற்போது இந்தியாவில் 4-ல் 3 மாவட்டங்களில் 10 சதவீதத்திற்கும் மேல் கொரோனா தொற்று பாதிப்பு உள்ளது. டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களும் இதில் அடங்கும் என கூறப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் தொடர்ந்து கட்டுப்பாடுகள் அமலில் இருக்க வேண்டும்.

தொற்று பாதிப்பு சதவிகிதம் 10 -ல் இருந்து 5 ஆக குறைந்தால் நாம் கட்டுப்பாடுகளை தளர்த்தலாம் என ஐசிஎம்.ஆர் இயக்குநர் கூறினார். டெல்லியில் 35 சதவிகிதமாக இருந்த தொற்று பாதிப்பு 17 சதவிகிதமாக குறைந்துள்ளது. ஆனால் டெல்லியில் நாளை கட்டுப்பாடுகளை தளர்த்தினால் அது பேரழிவாக அமையும் எனவும் கூறினார். கொரோனா தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Related Stories:

>