டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு ரூ.3 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளை-திசையன்விளை அருகே துணிகரம்

திசையன்விளை : நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள பெட்டைக்குளம் மெயின்ரோட்டில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. பொது ஊரடங்கை முன்னிட்டு இந்த டாஸ்மாக் கடை, கடந்த 9ம் தேதி இரவு முதல் பூட்டப்பட்டுள்ளது.  இந்நிலையில் நேற்று காலை டாஸ்மாக் கடையின் சுவற்றில் துளையிடப்பட்டு இருப்பதை பார்த்த அவ்வழியாக சென்ற மக்கள், கடை விற்பனையாளர்கள் மாடசாமி, ஜெபராஜ் ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து பார்த்து, டாஸ்மாக்  மேற்பார்வையாளர் குமாருக்கு தகவல் அளித்தனர்.

இதுகுறித்து அவர், திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் கொள்ளை நடந்த கடையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது ரூ.3 லட்சம் மதிப்பிலான உயர்ரக மதுபாட்டில்கள் கொள்ளை போயிருக்கலாம் என தெரிய வந்தது. மேலும் கைரேகை நிபுணர்களும் ெகாள்ளை நடந்த மதுக்கடையில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிந்து டாஸ்மாக் கடையில் துளையிட்டு கைவரிசை காட்டிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories:

>