முழு ஊரடங்கால் சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலை வெறிச்சோடியது-ஜாலியாக உலாவும் காட்டுப்பன்றிகள்

சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம் கர்நாடகா மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

24 மணி நேரமும் வாகனப் போக்குவரத்து உள்ள சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை தற்போது தமிழகம் கர்நாடகம் இரு மாநிலங்களிலும் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

இதனால்  இரு மாநில அளவில் உள்ள பண்ணாரி சோதனைச்சாவடி பகுதியில் பகல் நேரங்களில் காட்டுப்பன்றிகள் சாலையில்  உலா வருகின்றன.

வாகன போக்குவரத்து இருக்கும்போது சாலைக்கு வராத காட்டுப்பன்றிகள் தற்போது வாகன போக்குவரத்து இல்லாததால் கூட்டம் கூட்டமாக சாலையில் சுற்றித் திரிகின்றன. சாலையில் உலா வரும் காட்டுப்பன்றிகளால் பண்ணாரி சோதனைச்சாவடியில் பணியில் உள்ள வனத்துறை ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் அச்சமடைந்துள்ளனர்.

Related Stories: