மீன் மார்க்கெட், காய்கறி கடைகளில் 2-வது நாளாக மக்கள் கூட்டம்

கோவை : கோவை உக்கடம் மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட்களில் இரண்டாவது நாளாக நேற்று பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. மாநிலம் முழுவதும் இன்று முதல் இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த ஊரடங்கின் போது பொது போக்குவரத்து உள்ளிட்டவற்றிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நாளில் மளிகை, காய்கறி கடைகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் மதியம் 12 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கடைகளில் ஒரே சமயத்தில் 50 சதவீதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், முழு ஊரடங்கை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக கோவை மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட் ஆகியவற்றில் பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. பலர், அடுத்த இரண்டு வாரத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி சென்றனர்.

மீன் மார்க்கெட்டிலும் வழக்கத்திற்கு மாறாக கூட்டம் அதிகமாக இருந்தது. துணி கடைகள், நகை கடைகளிலும், பூ மார்க்கெட், காய்கறி மார்க்கெட்களில் இரண்டாவது நாளாக நேற்று பொதுமக்கள் அதிகளவில் குவிந்திருந்து பொருட்களை வாங்கி சென்றனர்.

Related Stories: