நகரங்களை தொடர்ந்து, தற்போது கிராமங்களும் கடவுளைத்தான் நம்பி இருக்க வேண்டும்: ராகுல் காந்தி ட்வீட்

டெல்லி: கொரோனா பரவலால் மக்கள் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் போது, அத்தியாவசிய பணிகள் என்ற அந்தஸ்துடன் இந்த திட்டத்தை மேற்கொள்வதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.டெல்லியில், நாடாளுமன்ற புதிய கட்டிடம், மத்திய செயலகம், துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு புதிய இல்லம் ஆகியவற்றின் கட்டுமான பணிகளும், ராஜபாதை சீரமைப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்டில் விஸ்டா என்ற இத்திட்டம் ரூ.13 ஆயிரத்து 450 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

சென்டிரல் விஸ்டா கட்டுமான பணிகள் நடக்கும் புகைப்படத்தையும், ஆக்சிஜன் நிரப்ப சிலிண்டருடன் மக்கள் வரிசையில் காத்திருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அதில், நாட்டுக்கு தேவை, சுவாசம்தான். பிரதமரின் புதிய வீடு அல்ல’’ என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். மேலும், கிராமப்பகுதிகளிலும் கொரோனா பரவி வருவதாக மற்றொரு பதிவில் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நகரங்களை தொடர்ந்து, தற்போது கிராமங்களும் கடவுளைத்தான் நம்பி இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். எனவே பிரதமர் மோடி பொதுமக்களை மனதில் கொண்டு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என கூறினார்.

Related Stories:

>