இளம் வீரர் ஜெய்ஸ்வாலுக்கு பரிசு வழங்கி வாழ்த்திய பட்லர்!

புதுடெல்லி: இந்தியாவில் நடைபெற்று வந்த 14வது ஐபிஎல் சீசன், வீரர்களுக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பினால் பாதியில் நிறுத்தப்பட்டு வீரர்கள் தற்போது அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப் பட்டு வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து அணியின் முன்னணி வீரரான ஜாஸ் பட்லரும் நாடு திரும்பினார். அவர் நாடு திரும்புவதற்கு முன்னர் இந்த ஐபிஎல் தொடரில் அவருடன் துவக்க வீரராக களமிறங்கிய இந்தியாவின் இளம் வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு பரிசாக ஒன்ைற கொடுத்தார். அது குறித்த விவரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதன்படி இந்த சீசனில் ராஜஸ்தான் அணிக்காக பட்லர் மற்றும் மனன் வோரா ஆகியோர் முதலில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால் மனன் வோரா சரியாக விளையாடாததால் அவருக்கு பதிலாக ஜெய்ஸ்வால், பட்லருடன் களமிறங்கினார். அவர் விளையாடிய இரண்டு இன்னிங்சிலும் ஓரளவு சிறப்பாக விளையாடினார் என்றே கூறலாம். இந்நிலையில் அவருடைய திறமையை பார்த்த பட்லர் அவருக்கு நாடு திரும்பும் முன்னர், தான் விளையாடுவதற்காக பயன்படுத்திய பேட்டை ஜெய்ஸ்வாலுக்கு பரிசாக கொடுத்தார். அந்த பேட்டில் “TO Yash Enjoy Your Talent Best Wishes” என்று எழுதப்பட்டிருந்தது.

Related Stories:

>