தமிழகத்தில் தடையற்ற ஆக்சிஜன் சப்ளையை உறுதிப்படுத்த மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் தடையற்ற ஆக்சிஜன் சப்ளையை உறுதிப்படுத்த மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவலின் 2வது அலை அதிகரித்து வரும் நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கொரோனா பரவலை தடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது தொடர்பாக உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரித்து வருகிறது. அந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு தரப்பில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ பணிகள் கழகத்தின் நிர்வாக இயக்குனர் உமாநாத் ஆகியோர் காணொலி மூலம் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

அப்போது ராதாகிருஷ்ணன் அளித்த விளக்கத்தில் மத்திய அரசு ஒதுக்கீடு செய்த 475 டன் ஆக்சிஜன் மே 2ஆம் தேதிக்கு பிறகு விடுவிக்கப்படவில்லை என்றும் விளக்கமளித்தார். ஏற்கனவே 220 டன் என்று ஒதுக்கப்பட்டது மட்டும் தான் முறையாக வந்து கொண்டிருந்ததாகவும் விளக்கமளித்தார். மே 2ஆம் தேதியன்று 475 டன் ஒடுக்குவதற்கு முடிவெடுக்கப்பட்டது. அதன்பிறகு முறையாக சப்ளை செய்யப்படவில்லை. அதை சப்ளை செய்வதற்கு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கையாக வைத்திருந்தார்.

அதேபோல செங்கல்பட்டில் 13 பேர் மரணமடைந்தது தொடர்பாக கொரோனா தொற்றினால் மரணமடையவில்லை என்றும் ஆக்சிஜன் சப்ளை தடைப்பட்டதால் மரணமடையவில்லை என்றும் விளக்கமளித்தார். அப்பொழுது மருத்துவ பணிகள் கழக இயக்குனர் உமாநாத் ஆஜராகி கேரளாவில் இருந்து வரப்பெற்ற 40 டன் ஆக்சிஜன் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் கையிருப்பு சப்ளை நிலையை பொறுத்தவரை இன்றைக்கும் நாளைக்கும் ஆக்சிஜன் சப்ளை வழங்கப்படும் படுக்கைகளுக்கு ஆக்சிஜன் சப்ளை செய்யப்படும் என்றும் நாளை மறுநாள் மிக மோசமான சூழ்நிலையை நாம் எட்டிவிடுவோம் எனவும் ஒரு அச்சத்தை நீதிமன்றத்தில் பதிவு செய்திருக்கிறார்.

குறிப்பாக 18 முதல் 45 வயதுடையவர்களுக்கான தடுப்பூசி வாங்குவதற்காக மே 5ஆம் தேதி முழு தொகை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே சப்ளையை தடையில்லாமல் வழங்குவதற்கு தேவையான உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்றும் உமாநாத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: