பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நிறைவுமாணவ மாணவியர் உற்சாகம்

நாகர்கோவில், ஏப்.4: பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில் மாணவ, மாணவியர் உற்சாகத்துடன் காணப்பட்டனர். குமரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் கடந்த 12ம் தேதி தொடங்கி நடந்தது. மார்த்தாண்டத்தில் 45 பொதுத்தேர்வு மையங்களும், ஒரு தனித்தேர்வு மையமும் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் 133 பள்ளிகளை சேர்ந்த 5939 மாணவர்களும், 6090 மாணவிகளும் தேர்வு எழுத நுழைவு சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தது. நாகர்கோவிலில் 37 பொதுத்தேர்வு மையங்களும், ஒரு தனித்தேர்வு மையமும் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் 123 பள்ளிகளை சேர்ந்த 5866 மாணவர்களும், 5497 மாணவிகள் என மொத்தம் 23 ஆயிரத்து 392 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத நுழைவு சீட்டுகள் வழங்கப்பட்டு தேர்வுகள் நடைபெற்றது.

நேற்று பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நிறைவு பெற்ற நிலையில் மாணவ, மாணவியர் உற்சாகத்துடன் காணப்பட்டனர். ஒருவர் மீது ஒருவர் மை வீசி தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். மாணவர்கள் ஆட்டோ கிராப் வாங்கிக்கொண்டனர். மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டி தழுவி பிரியா விடைபெற்றனர். பொதுத்தேர்வுகள் நிறைவு பெறுவதையொட்டி நேற்று பிளஸ் 2 தேர்வு மையங்களையொட்டிய பகுதிகளில், பள்ளிகளில் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக பிளஸ் 1 பொதுத்தேர்வுகள் நாளை (5ம் தேதி) நிறைவு பெறுகிறது. 10ம் வகுப்பு பொதுத்தர்வுகள் ஏப்ரல் 6ம் தேதி தொடங்க உள்ள நிலையில் ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெறுகிறது.

The post பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நிறைவு

மாணவ மாணவியர் உற்சாகம் appeared first on Dinakaran.

Related Stories: