மும்பை: பாலிவுட்டின் மூத்த நடிகர் ரந்தீர் கபூருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் அவர், கோகிலாபென் அம்பானி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா வைரசின் இரண்டாவது அலை நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பாலிவுட்டில் கடந்த சில வாரங்களில் மட்டும் நீல் நிதின் முகேஷ், சோனு சூத், மனிஷ் மல்ஹோத்ரா, கத்ரீனா கைஃப், அக்ஷய் குமார், கோவிந்தா, பரேஷ் ராவல், ஆலியா பட், ரன்பீர் கபூர், மற்றும் ரோஹித் சரஃப் உள்ளிட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதற்கு முன்னதாக, அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், அர்ஜுன் கபூர், மலாக்கா அரோரா மற்றும் சிலரும் பாதிக்கப்பட்டனர்.