திருவள்ளூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் மலைபோல் குவிந்து கிடக்கும் மருத்துவ கழிவுகள்!: தொற்று பரவும் அபாயம்..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் மலைபோல் குவிந்து கிடக்கும் மலைபோல குவித்து வைக்கப்பட்டிருக்கும் மருத்துவ கழிவுகளால் சுற்றுவட்டார பகுதிகளில் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் தினந்தோறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையானது அதிகரித்து கொண்டே செல்கிறது. மருத்துவமனையில் உள்ள சுமார் 150 படுக்கைகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. இதனால் படுக்கை வசதி இன்றி நோயாளிகள் நீண்ட நேரம் ஆம்புலன்சில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. 

இந்நிலையில், இந்த மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் கவச உடைகள், கழிவுகள், ஊசிகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவை அங்கிருந்து அகற்றப்பட்டு மருத்துவமனை வளாகத்திலேயே மலைபோல் குவிக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுகளை காகங்கள் கொத்தி சென்று பல்வேறு இடங்களில் வீசி செல்கின்றன. இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதாக அங்குள்ள பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றன. 

குழந்தைகள் மருத்துவமனை பின்புறமே இந்த மருத்துவ கழிவுகள் குவியலாக சேர்த்து வைக்கப்பட்டுள்ளதால் குழந்தைகளுக்கு எளிதாக தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மருத்துவமனை வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளை முறையாக கையாண்டு உடனடியாக அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்களும், நோயாளிகளும் கோரிக்கைவிடுத்துள்ளனர். 

Related Stories: