இந்தியாவுக்கு கூகுள் 135 கோடி நிதியுதவி

புதுடெல்லி:   கொரோனா 2வது அலையால் பாதித்துள்ள இந்தியாவுக்கு பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிதியுதவி அறிவிக்க தொடங்கி உள்ளன. கூகுள் நிறுவனம் நேற்று ரூ.135 கோடி நிதியுதவியை அறிவித்தது. இது குறித்து அது வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கிவ் இந்தியா அமைப்பும், யுனிசெப் நிறுவனமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நெருக்கடியால் சிக்கி தவிக்கும் குடும்பங்களுக்கு, கூகுள் நிறுவனத்தின் நிதியுதவியை பயன்படுத்தி உதவிகள் வழங்கும். மேலும், கொரோனா பரிசோதனை உபகரணங்கள், ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை வாங்கித் தரவும் இதை பயன்படுத்தும்,’ என கூறப்பட்டுள்ளது.  கூகுள் தலைமை செயல் அதிகாரியான (சிஇஓ) சுந்தர்பிச்சையும் இதை உறுதிப்படுத்தி உள்ளார்.

நாதெல்லா உருக்கம்

மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்ய நாதெல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா 2வது அலையால் இந்தியா தற்போது சந்தித்து வரும் நிலையை கண்டு இதயம்  நொறுங்கினேன். அமெரிக்க அரசு இந்தியாவிற்கு உதவ முன்வந்ததற்கு நன்றி. மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் சாதனங்களை வாங்குவதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் உதவும்,’ என கூறியுள்ளார்.

Related Stories: