15 யானைகள் அலங்கார அணிவகுப்புடன் திருச்சூர் சாஸ்தா கோயில் பூரம் திருவிழா

பாலக்காடு: திருச்சூர் சாஸ்தா கோயில் பூரம் திருவிழா, 15 யானைகள் அலங்கார அணிவகுப்புடன் நேற்று நடந்தது. இதில், பாரமேற்காவு கோயில் யானையான பத்மநாபன் மீது அம்மன் எழுந்தருளி வாத்யகலைஞர்கள் வாசிப்பு தாளத்திற்கு ஏற்ப யானைகள் மீது வண்ண முத்து மணிக்குடைகள் மாற்றம் நடைபெற்றது. கேரள மாநிலம், திருச்சூர் கணிமங்கலம் சாஸ்தா கோயிலில் நேற்று பூரம் திருவிழா கொண்டாடப்பட்டது. உற்சவர் ஒரு யானையில் மட்டும் எழுந்தருளி வடக்குநாதரை வணங்கி வீதியுலாவாக சென்றது.

தொடர்ந்து நெய்தலைக்காவு, செம்புக்காவு, ஐயந்தோள், கிழக்காட்டு ஆகிய இடங்களிலிருந்துள்ள பகவதி கோயில்களின் உற்சவர்கள் யானை மீது ஊர்வலமாக எழுந்தருளி வடக்குநாதர் கோயில் சுற்றுப்பிரகாரத்தில் வலம்வந்து வணங்கி சென்றன. திருச்சூர் பூரம் திருவிழாவில் மிகவும் பிரபலமான பாரமேற்காவு- திருவம்படி ஆகிய இரண்டு கோயில்களின் யானைகள் அலங்கார அணிவகுப்புடன் செண்டைவாத்தியங்கள் அதிர வீதியுலா வரப்பட்டன. பாரமேற்காவு கோயில் யானையான பத்மநாபன் மீது அம்மன் எழுந்தருளி 15 யானைகள் அலங்கார அணிவகுப்புடன் வாத்யகலைஞர்கள் வாசிப்பு தாளத்திற்கு ஏற்ப யானைகள் மீது வண்ண முத்து மணிக்குடைகள் மாற்றம் நடைபெற்றது. கோயில் நிர்வாகிகளும், குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே பங்கேற்றனர். சிறியஅளவிலான பட்டாசுகள் மட்டுமே வெடிக்கப்பட்டன.

Related Stories: