மருத்துவ தேவைக்காக ஆக்சிஜன் ஏற்றி செல்லும் வாகனங்களை அதிகாரிகள் யாரும் தடுத்து நிறுத்தாதீர்கள்!: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்..!!

டெல்லி: ஆக்சிஜன் ஏற்றி செல்லும் வாகனங்களை அதிகாரிகள் யாரும் தடுத்து நிறுத்தக்கூடாது என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா தொற்றின் 2ம் அலை வேகமாக பரவி கொண்டிருக்கும் நிலையில் ஏராளமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தங்கு தடையில்லாமல் ஆக்சிஜனை கொண்டு சேர்க்கவேண்டிய பொறுப்பு மாநில அரசுகளுக்கும் இருக்கிறது. அதன் காரணமாக ஆக்சிஜன் ஏற்றி செல்லும் வாகனங்களை அதிகாரிகள் யாரும் தடுத்து நிறுத்தக்கூடாது என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தொழில்துறை செயலாளருக்கும் அதேபோல அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் இந்த கடிதம் எழுதப்பட்டிருக்கின்றது. அதில், அதிகாரிகள் யாரும் ஆக்சிஜன் ஏற்றி செல்லக்கூடிய வாகனங்களை தடுத்து நிறுத்தக் கூடாது.

மருத்துவ தேவைகளுக்காக வாகனம் செல்லும் போது வாகனத்தை தடுத்து நிறுத்தி ஆவணம் கேட்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு சோதனை என்ற பெயரில் வாகனத்தை மணிக்கணக்கில் நிறுத்தி வைக்காமல் வாகனம் சுலபமாக செல்ல வேண்டிய வழியை உருவாக்கி தர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு வாகனமானது மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவிருந்தாலும், இல்லையெனில் மாநிலம் விட்டு மாநிலம் செல்லவேண்டியதாக இருந்தாலும் எந்த ஒரு அதிகாரியும் ஆக்சிஜன் ஏற்றி செல்லும் வாகனங்களை  தடுத்து நிறுத்தக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக்சிஜன் ஏற்றி செல்லும் வாகனங்கள் விரைந்து செல்வதை உறுதிப்படுத்துமாறு அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் மத்திய அரசு கடிதத்தின் வாயிலாக அறிவுறுத்தியுள்ளது.

மேலும் தலைமை செயலாளர்கள் இந்த விவகாரத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையின் உயரதிகாரிகள் ஆகியோர் நேரடியாக கலத்தில் இறங்கி இந்த விவகாரத்தை உறுதி செய்யுங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய தினம் டெல்லி துணை முதல்வர் ஒரு குற்றச்சாட்டினை வைத்திருந்தார். அதில் உத்திரபிரதேசம், அரியானாவில் இருந்து ஆக்சிஜன் ஏற்றி வரக்கூடிய வாகனங்களை அதிகாரிகள் வழிமறித்து சோதனை செய்வதாக புகார் கூறியிருந்தார். இவற்றை எல்லாம் தடுப்பதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவாக இந்த கடிதமானது எழுதப்பட்டிருக்கிறது.

Related Stories:

>