நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ₹95 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

நாமக்கல் : நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ₹95 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடந்தது. நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், பருத்தி ஏலம் நேற்று நடந்தது. இதில் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த விவசாயிகள் மொத்தம் 4600 மூட்டை பருத்தியை கொண்டு வந்திருந்தனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். கூட்டுறவு சங்க அலுவலர்கள் விவசாயிகள் முன்னிலையில் ஏலம் நடத்தினர். இதில், குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ₹4100 முதல் அதிகபட்சமாக ₹6809 வரை ஏலம் போனது. மொத்தம் 4600 மூட்டை பருத்தி ₹95 லட்சத்துக்கு ஏலம் போனது.

₹15 லட்சத்திற்கு எள், பருத்தி ஏலம்

திருச்செங்கோடு:  திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாராந்திர எள் விற்பனை ரகசிய டெண்டர் முறையில் நடந்தது. இதில், சின்னசேலம், ஆத்தூர், கெங்கவல்லி, காங்கேயம், பரமத்தி, நாமக்கல், ராசிபுரம, வீரகனூர், தம்மம்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து விவசாயிகள் எள் ரகங்களைக் கொண்டு வந்தனர். இதில், 150 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இவற்றை வாங்க பவானி. அனுமன்பள்ளி, முத்தூர், காங்கேயம், திருப்பூர், திருச்செங்கோடு, சங்ககிரி, ஈரோடு பகுதிகளை சேர்ந்த சுமார் 10 வியாபாரிகள் வந்தனர்.

ரகசிய டெண்டர் முறையில் எள் ₹10லட்சத்திற்கு விற்பனையானது. சிவப்பு எள் கிலோ ₹80 முதல் ₹103.90 வரை விற்றது.வெள்ளை எள் கிலோ ₹83 முதல் ₹104.90 வரை விற்றது. கருப்பு எள் ₹81.60 முதல் ₹105.90 வரை விற்பனையானது. பருத்தி 250 மூட்டை ₹5லட்சத்திற்கு விற்பனையானது. பருத்தி ரகங்களை முசிறி புதுப்பட்டி, வடக்கு நல்லியம்பட்டி, தெற்கு நல்லியம்பட்டி, தண்டலை, திருத்தலையூர், சேங்கணம், ராசிபுரம், கதிரா நல்லூர், புதுச்சத்திரம், துறையூர், அம்மம்பாளையம், மருவத்தூர் போன்ற பகுதிகளிலிருந்து விவசாயிகள் கொண்டு வந்தனர். பிடி காட்டன் குவிண்டால் ₹5842 முதல் ₹6700 வரை விலை போனது.

Related Stories: