வத்திராயிருப்பில் புதர்மண்டி கிடக்கும் வாட்டர் டேங்-சுத்தம் செய்ய வலியுறுத்தல்

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பில் குடிநீர் மேல்நிலை தொட்டியை சுற்றி கருவேலம் புதர்மண்டி கிடக்கிறது. இதனை சுத்தம் செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். வத்திராயிருப்பு பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்குள்ள மக்களுக்கு குடிநீர் வழங்க 35 வருடங்களுக்கு மேலான 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டி உள்ளது. குடிநீர் மேல்நிலைத் தொட்டி வளாகத்தைச் சுற்றி முட்செடிகள் முளைத்துள்ளன. மேலும் சுகாதாரமற்ற முறையில் இருக்கிறது. அதோடு சுற்றுச்சுவர் இல்லாததால் குடிநீர் மேல்நிலைத் தொட்டி பாதுகாப்பற்ற முறையில் உள்ளது. மேலும் மேல்நிலைத் தொட்டி மேலே உள்ள கிராதிகள் சேதமடைந்துள்ளன.

எனவே குடிநீர் மேல்நிலைத் தொட்டி வளாகத்தைச் சுற்றி முட்செடிகளை அகற்றிவிட்டு சுற்றுச்சுவரை கட்டி பாதுகாப்பான முறையில் இருப்பதற்கான நடவடிக்கையை பேரூராட்சி நிர்வாகம் செய்ய வேண்டும். அதோடு குடிநீர் மேல்நிலைத் தொட்டிக்கு செல்லக்கூடிய ஏணிப்படிகள் பராமரிப்பின்றி உள்ளன. அதனை பராமரிக்க வேண்டும். குடிநீர் மேல்நிலைத் தொட்டி பாதுகாப்பான முறையில் இருக்கிறதா என ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: