வரும் 27-30ம் தேதி வரை நடக்க இருந்த ஜேஇஇ மெயின் தேர்வு ஒத்திவைப்பு: கொரோனா அச்சுறுத்தலால் முடிவு

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா 2வது அலை மிக தீவிரமாக தாக்கி வருகிறது. இதன் எதிரொலியாக, சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது. 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல், மருத்துவம முதுநிலை படிப்புக்கான நீட் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது. இதை பின்பற்றி, பல்வேறு மாநிலங்களும் 10, 12ம் வகுப்பு ேதர்வுகளை ஒத்திவைப்பது, ரத்து செய்வது போன்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில், நாடு முழுவதும் இன்ஜினியரிங் கல்லூரிகளை மாணவர்களை சேர்ப்பதற்கான பொது தகுதி தேர்வான, ஜேஇஇ மெயின் நுழைவு தேர்வு இதனிடையே வருகிற 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை  நடைபெற இருந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இந்த நுழைவு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நேற்று அறிவித்தார். இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாடு முழுவதும் தற்போது நிலவி வரும் கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தல், தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வு நடத்தும் அதிகாரிகளின்  பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஏப்ரல் 27ல் நடைபெற இருந்த ஜேஇஇ மெயின் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது.

இத்தேர்வை நடத்துவதற்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும். தேர்வுக்கு 15 நாட்கள் முன்னதாக மாணவர்களுக்கு தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்,’ என கூறப்பட்டுள்ளது. இந்தாண்டு தொடக்கத்தில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதம் என 4 முறை ஜேஇஇ நுழைவு தேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்து இருந்தது. இதன்படி, பிப்ரவரி மற்றும் மார்ச்சில் முதல் இரண்டு கட்ட தேர்வுகள் நடந்து முடிந்தது. இதில், முதல் கட்டமாக 6.2 லட்சம் மாணவர்கள், 2வது கட்டமாக 5.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>