ரூ.13 லட்சத்துக்கு எள், ரூ.2 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் அடுத்துள்ள முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் டெண்டர் முறையில் தேங்காய் ஏலம் நடைபெறுகிறது. அதன்படி நேற்று நடந்த ஏலத்தில் முத்தூர் சுற்று வட்டார விவசாயிகள் 88 பேர், நேற்று விற்பனை கூடத்திற்கு 20187 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஏலத்தில் முதல் தரம் ஒரு கிலோ 36.20  ரூபாய்க்கும், இரண்டாம் தரம் ஒரு கிலோ 27.25  ரூபாய்க்கும், சராசரி 35.75 ரூபாய்க்கும் ஏலம் போனது. 4 டன் தேங்காய்கள் மொத்தம் ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இதே போல் நடந்த கொப்பரை ஏலத்தில் 2329  கிலோ கொப்பரை வந்தது. அவை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.124.15 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக ரூ.83.40க்கும் ஏலம் போனது.  மொத்தம் 2329 கிலோ கொப்பரை ரூ. 2 லட்சத்து 67 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடந்தது.

 இதில் 50  விவசாயிகள் பங்கேற்றனர். இதே ேபால் ேநற்று நடந்த எள் ஏலத்திற்கு சுற்றுவட்டார 89 விவசாயிகள் தாங்கள் விளைவித்த 14157 கிலோ எள் கொண்டுவந்தனர். இதில் சிவப்பு எள் கிலோ ரூ.83.99 முதல் ரூ.104.75 வரையும், கருப்பு எள் கிலோ ரூ.105.89 முதல் 110.09 வரையும் ஏலம் போனது. மொத்தம் 14157 கிலோ எள், 13 லட்சத்து 56 ஆயிரத்து 720 ரூபாய்க்கு ஏலம் நடைபெற்றதாக  என விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஸ்ரீரங்கன் தெரிவித்தார்.

Related Stories:

>