மாத்திரை வாங்கியதில் 99 லட்சம் ஊழல் சேலத்தில் ரெய்டு

சேலம்: சேலம் மாநகராட்சி நகர் நல அலுவலராக இருப்பவர் பார்த்திபன் (45). இவர் கடந்த 2 ஆண்டுகளாக சேலத்தில் பணியாற்றி வருகிறார். இவரது பங்களா, சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில் உள்ள மாநகராட்சி கமிஷனர் வீட்டுக்கு அருகில் உள்ளது. நேற்று காலை சுமார் 8 மணியளவில் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனை 9 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது.

நகர் நல அலுவலர் பார்த்திபன், மதுரை மாநகராட்சியில் உதவி நகர்நல அதிகாரியாக பணியாற்றினார். கடந்த 2017-18ம் ஆண்டுகளில் டெங்கு காய்ச்சலுக்கு மருந்துகள் வாங்கியதில் 99 லட்சம் ஊழல் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக  மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசார் பார்த்திபன் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக இந்த திடீர் சோதனை நடந்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: