விருதுநகர் நகராட்சி பகுதியில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்

விருதுநகர்: விருதுநகர் நகராட்சி பகுதியில் கொசுக்களை கட்டுப்படுத்தும் வகையில் தீவிரமாக புகை மருந்து அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விருதுநகர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் சுமார் 90 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சியில் 150க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் உள்ளனர். இந்நிலையில், நகராட்சி அலுவலகத்தில் 5 நவீன கொசு மருந்து அடிக்கும் இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் நகராட்சி ஊழியர்கள் மூலம், காலை மற்றும் மாலை வேளைகளில் வார்டு வாரியாக புகை மருந்து அடிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து நகராட்சி சுகாதாரபிரிவு அலுவலர் கூறுகையில், டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை புகை மருந்து மூலம் கட்டுப்படுத்தி விட்டால், பொதுமக்களுக்கு பெருமளவு டெங்கு காய்ச்சல் பரவ விடாமல் தடுக்க முடியும். எனவே, 5 சுகாதார பிரிவுகளிலும் இப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்….

The post விருதுநகர் நகராட்சி பகுதியில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: